15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் இசைஞானி இளையராஜா – கவிஞர் பஞ்சு அருணாச்சலம் கூட்டணி..!

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் இசைஞானி இளையராஜா – கவிஞர் பஞ்சு அருணாச்சலம் கூட்டணி..!

15 ஆண்டுகளுக்கு பிறகு கவிஞர் பஞ்சு அருணாச்சலம் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதுகிறார்.  

குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.விஜய் பிரகாஷ் பிரமாண்டமான செலவில் தயாரிக்கும் புதிய தமிழ்ப் படம் முத்துராமலிங்கம். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இதில்தான் கவிஞர் பஞ்சு அருணாச்சலம் திரும்பவும் கவிஞராக வலம் வர இருக்கிறார்.

IMG_0278

இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், கேத்ரின் திரேசா நடிக்கிறார்கள். மேலும் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம் புலி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கவுள்ளனர். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜதுரை.

கவிஞர் பஞ்சு அருணாச்சலம் இசைஞானி இளையராஜா ஜோடி, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் பவனி வருகின்றனர். 1976, 1986, 1996, 2006-க்கு பிறகு இந்த 2016-ம் ஆண்டில்தான் இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

கவிஞர் பஞ்சு அருணாச்சலம் இந்த ‘முத்துராமலிங்கம்’ திரைப்படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இதன் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதும் பெருமையைப் பெறுகிறார் கவிஞர் பஞ்சு அருணாச்சலம். கவுதம் கார்த்திக்கின் அப்பா கார்த்திக், தாத்தா முத்துராமன் ஆகியோர் நடித்த படங்களுக்கும் பஞ்சு அருணாச்சலம் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score