ஶ்ரீஆர்ச் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சக்ரா, ராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நாடு.
இதில் கதாநாயகனாக ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன் நடிக்க, கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம் புலி, R.S.சிவாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – சத்யா, ஒளிப்பதிவு – சக்தி, கலை இயக்கம் – இளையராஜா, படத் தொகுப்பு – PK., பத்திரிக்கை தொடர்பு – எம்.பி.ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – இயக்குநர் சரவணன்.
மலைவாழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கும்கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் இந்தப் படத்தில் மிக யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்களாம்.
இப்படம் முழுக்க, முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
விரைவில் படம் பற்றிய மற்றைய செய்திகளும், டீசர், டிரெயிலர், இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திகளும் வெளியாகும்.
Our Score