விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’

‘சண்டைகோழி பாகம் 2’ நிறுத்தப்பட்டதன் மறுநாளே விஷாலின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

விஷால் இப்போது ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் ‘மருது’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும்  மிஷ்கினின் படத்தில் அவர் நடிப்பாராம்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கப் போகும் அந்த புதிய படத்திற்கு ‘துப்பறிவாளன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதுவொரு சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்ஷன் படம். விஷால் தனது சொந்த பேனரிலேயே இப்படத்தைத் தயாரிக்கிறார்.

மிஷ்கினும் தற்போது இயக்குநர் ராமின் இயக்கத்தில் ‘சவரக்கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது முடிந்த்தும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளைத் துவக்க உள்ளாராம்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பூஜை நேற்றைக்கு நடைபெற்றது. இதில் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

vishal-myskin-thupparivaalan-movie-1 vishal-myskin-thupparivaalan-movie-2 vishal-myskin-thupparivaalan-movie-3 vishal-myskin-thupparivaalan-movie-4 vishal-myskin-thupparivaalan-movie-5 vishal-myskin-thupparivaalan-movie-6

Our Score