full screen background image

சுதீப்-பாவனா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘முரட்டு கைதி’ திரைப்படம்..!

சுதீப்-பாவனா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘முரட்டு கைதி’ திரைப்படம்..!

வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக உதய்.கே.மேத்தா தயாரித்திருக்கும் படம் ‘முரட்டு கைதி.’ 

2013-ம் ஆண்டு கன்னடத்தில் சுதீப் நடித்து வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘பச்சன்.’ கர்நாடகாவில் மாபெரும் வசூல் சாதனை செய்த படம் இது. 11 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 25 கோடி வசூலித்தது. இந்த பச்சன் படம்தான் இப்போது தமிழில் ‘முரட்டு கைதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

‘நான் ஈ’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சுதீப் மேலும் நட்சத்திர அந்தஸ்தை ‘பச்சன்’ படத்தின் மூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாவனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் நாசர், ஜெகபதிபாபு, பிரதீப் ராவத், ரவிசங்கர், ஆஷிஷ் வித்யார்த்தி, பாருல் யாதவ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இசை    –  வி. ஹரிகிருஷ்ணா

ஒளிப்பதிவு   –  சேகர் சந்துரு

எடிட்டிங்   –   அருண்சாகர்

எழுதி இயக்கியிருப்பவர் ஷஷாங்க். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுக்க கோவை வேல் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.

Our Score