full screen background image

முனி – 3 படம் வரும் டிசம்பரில் வெளியீடு

முனி – 3 படம் வரும் டிசம்பரில் வெளியீடு

‘காஞ்சனா’ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் ‘முனி – 3 கங்கா’ படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

Actress Tapsee_Latest Photo Gallery_1 Nithya_Menon_1

இதிலும் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஒளிவீரன்

எழுதி இயக்கியிருக்கும் ராகவா லாரன்ஸ் படம் பற்றி கூறுகையில் ..

“வருகிற 4-ம் தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப்படவுள்ளன. தொடர்ச்சியாக 20 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பும் முடிவடைகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் தேவைப்படுகிறது. படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இடையில் சில மாதங்கள் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் இந்த காலதாமதம். நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம். ‘காஞ்சனா’ போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு…” என்றார் லாரன்ஸ்.

Our Score