ஒரே நாளில் 6 மில்லியன் பார்வைகள் : ‘மட்டி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனை!

ஒரே நாளில் 6 மில்லியன் பார்வைகள் : ‘மட்டி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனை!

இந்தியாவில் முதன்முதலில் பிரம்மாண்டமான முறையில் ஆறு மொழிகளில் உருவாகியிருக்கிறது ‘மட்டி திரைப்படம்.

இந்தியாவின் முதன்முதலாக மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர்.

‘கே.ஜி.எப்.’ படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ராட்சசன்’ படப்புகழ் சான் லோகேஷ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். ‘புலி முருகன்’ புகழ் ஆர்.பி.பாலா  இப் படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார். அறிமுக இயக்குநரான டாக்டர் பிரகபல் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது .அந்தந்த மொழிகளுக்கும்  தனித்தனியானதாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் டீஸர் வெளியானபோது ஒரே நாளில் 16 மில்லியன் பேர் அதைப் பார்த்ததால் புதிய சாதனையை இத்திரைப்படம் படைத்தது.

அதேபோல் நேற்று ட்ரெய்லர் வெளியானபோதும் மீண்டும் ஒரு சாதனையை இத்திரைப்படம் படைத்துள்ளது.

டிரெயிலர் வெளியிட்ட அன்று ஒரே நாளில் ஆறு மில்லியன் பேர் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இது தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும்.

இந்தப் படம் வரும் டிசம்பர் 10-ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

Our Score