full screen background image

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X திரைப்படம்

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X திரைப்படம்

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்'(Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் S.லஷ்மண் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

‘மரகத நாணயம்’, ‘பேச்சிலர்’, ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பு – பிரசன்னா G.K., தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவன். சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் சில்வா. கலை – இந்துலால் கவீத், தயாரிப்பு மேற்பார்வை – A.P.பால்பாண்டி. ஆடை வடிவமைப்பு – உத்ரா மேனன், நிர்வாகத் தயாரிப்பு – ஷ்ரவந்தி சாய்நாத். பத்திரிகை தொடர்பு – ஏ.ஜான், இணை தயாரிப்பு – A.வெங்கடேஷ். 

‘எஃப்.ஐ.ஆர்.’ என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.

படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

மிகப் பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.

நேற்றைக்கு இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Our Score