மிக சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதுதான் என்பார்கள். தன் முழு திறமையையும் நடிப்புக்கென அர்பணித்தவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். ‘சுட்ட கதை’, ‘இராண்டாம் உலகம்’ படங்களில் நடித்த வெங்கி என்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ஹரிநாதன் தனது அடுத்த படமான ‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இப்படித்தான் பகிர்கிறார்.
“Youtube-ல் ‘ஸ்டெப் மணி என்ற’ கதாபாத்திரமாய் என்னை பலருக்கும் தெரியும். ஒரு Concept எழுதி அதை நடிப்பதென்பது எளிதில் சாத்தியம். சினிமா என்பது ஒரு பெரிய கடல். ஒரு காட்சிக்கு பல நபர்கள் உழைக்கிறார்கள். இதுநாள் வரையில் நான் சினிமாவில் பயின்ற அனைத்து விஷயங்களைக் காட்டிலும் இப்படத்தில் அதிகமாக பயின்றுள்ளேன்.
இப்படத்தில் Situational காமெடி எனும் நகைச்சுவை பாணியை பயன்படுத்தியுள்ளோம். இது மக்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இயக்குநர் மதுமிதா எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். கதை உருவாக்கம் முதல் திரையிடல்வரை அனைத்திலும் ஈடுபட வைத்தார். இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
செல்வராகவன் சார் இயக்கத்தில் நான் நடித்த ‘இராண்டாம் உலகம்’ படத்தின் அனுபவங்கள் எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு பெரிதும் உதவியது. S.P.B. சார், லட்சுமி மேடம், பாக்யராஜ் சார் போன்ற ஜாம்பவான்களுடன்கூட நடித்த காட்சிகள் மிகவும் இனிதாய் அமைந்தது. பாக்யராஜ் சார், படத்தில் எனது நடிப்பை பார்த்து பாராட்டியது மிகவும் பெருமையாய் இருந்தது..” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் வெங்கி.








