SS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13-ம் தேதி வெளி வரவுள்ளது ‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ திரைப்படம். புதுமுக இயக்குநர் சத்தியமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹானி ஆகியோர் நடித்துள்ளனர்.
B.Sc ஃபிலிம் டெக்னாலஜி மாணவியான ஜெய் குஹைனி எதிலும் புதுமையை தேடும் நாயகி. இந்த CSK படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி விவரிக்கிறார்.
“CSK படத்தில் கார்த்திகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்தபோது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே என் முடிவை மாற்றிக் கொண்டேன்…
200 லிட்டர் தண்ணி இருக்கும் டேங்கில் கை, கால்களைக் கட்டி முங்க விட்டது.. இரண்டு மாடிகளில் கையை கட்டி தரதரவென இழுத்து சென்றது என ஒரு ஹீரோக்கு நிகராய் எனக்கும் காட்சிகள் இருந்தன. இத்தகைய காட்சிகளில் டூப் போடாமல் நடித்ததில் உடலில் அங்கங்கே காயங்கள் ஏற்பட்டாலும் இந்த நடிப்பு அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாராயணன் ஒரு காட்சியில் என்னை அறைய வேண்டும். அப்படி அறைந்த பொழுது அவரது சட்டை பட்டனில் எனது நீண்ட முடி சிக்கிக் கொண்டது. அன்று ஒரு முடிவெடுத்து எனது கூந்தலின் நீளத்தை குறைத்துவிட்டேன்.
CSK படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜூலி போல் ஒரு ‘Tom Boy’ கதாபாத்திரத்தில் அதிரடி சண்டை காட்சிகளுடன் நடிக்க வேண்டும் என்று எனக்குள் ஆசையாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பலரின் நெடுநாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக் கூடிய குடும்பத் திரைப்படம். இது நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்…” என்று மெல்லிய இதழ்கள் புன்னகை சிதறக் கூறினார் ஜெய் குஹானி.