The Hindu குடும்பத்தினர் தயாரித்துள்ள ‘மோ’ படம்

The Hindu குடும்பத்தினர் தயாரித்துள்ள ‘மோ’ படம்

பேய் படங்கள் வந்து கொண்டிருக்கும் வரிசையில், திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வர இருக்கிறது ‘மோ’ திரைப்படம்.

இந்தப் படத்தை இயக்குநர்கள் செல்வா மற்றும் ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன்.R.நல்லான் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். சுரேஷ் ரவி, ‘முண்டாசுப்பட்டி’ புகழ் ராம்தாஸ், ரமேஷ் திலக், யோகிபாபு, ‘கிடாரி’ படத்தின் இசையமைப்பாளர் ‘தர்புகா’ சிவா, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். ‘யுத்தம் செய்’ மற்றும் ‘முகமுடி’ படங்களில் நடித்த செல்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரும் ‘இனிமேல் இப்படிதான்’ படத்தின் இசையமைப்பாளருமான சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியனின் துணை ஒளிப்பதிவாளர் விஷ்ணு.ஸ்ரீ.மு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிநாத் படத் தொகுப்பையும், பாலசுப்புரமணியம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

‘WTF ENTERTAINMENT’ என்ற நிறுவனத்தின் சார்பில் ‘தி இந்து’ நாளிதழின் குடும்பத்தை சார்ந்த ரோஹித் ரமேஷ்,  ‘MOMENT ENTERTAINMENT’ நிறுவனத்தின் G.A.ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அடுத்த மாதம் நவம்பர் 18-ம் தேதியன்று பிரபல விநியோகஸ்தரான வெங்கடேஷ் ராஜா தனது ‘VENKEY’S FILM INTERNATIONAL’  நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

Our Score