நடிகர் மிர்ச்சி சிவா வசனகர்த்தாவானார்..!

நடிகர் மிர்ச்சி சிவா வசனகர்த்தாவானார்..!

நடிகர் மிர்ச்சி சிவா திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பேயே ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று பெயர் எடுத்தவர். ரேடியோ மிர்ச்சி என்ற தனியார் பண்பலை ஒலிபரப்பு நிறுவனத்தில் பல சுவையான நிகழ்ச்சிகளை எழுதி, பேசி, தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சிகளில் பேச வந்த சினிமா பிரபலங்களை கலாய்த்த கலாய்ப்பில் அவர்களுடன் நெருங்கிப் பழகினார். இந்தப் பழக்கத்தின் காரணமாய் ’12-பி’, ‘விசில்’ ஆகிய படங்களில் சின்னச் சின்ன ரோல்கள் செய்தார். பின்பு தொலைக்காட்சிகளிலும் காமெடி நிகழ்ச்சிகளில் தலைகாட்டினார். வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை-28’ படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்தார். தொடர்ந்து ‘சரோஜா’விலும் நடித்தார். இரண்டுமே ஹிட்டாகிவிட.. தனி ஹீரோவாக ‘தமிழ்ப்படம்’ படத்தில் சூப்பர் ஹிட்டடித்தார்.

இதற்குப் பின் ‘வா’, ‘பதினாறு’, ‘கலகலப்பு’, ‘தில்லுமுல்லு’, ‘சொன்னா புரியாது’, ‘யா யா’, ‘வணக்கம் சென்னை’ என்று இவரது படப் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போது ‘பூச்சாண்டி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் எழுத்துத் திறமையை மறந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது வசனம் எழுதவும் செய்கிறார். அவருடைய நீண்ட நாள் நண்பரான பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா என்கிற படத்தி்ற்கு மிர்ச்சி சிவாதான் வசனம் எழுதியிருக்கிறாராம்.

tamil-web-poster-1

கிரிக்கெட் மீது மிகுந்த வெறி கொண்டவர் சிவா. அவருக்கு கிரிக்கெட் பற்றி பல விஷயங்கள் தெரியும். அவர் எழுதினால் பல விஷயங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கருதியதால் சிவாவை எழுதச் சொன்னேன் என்றார் இயக்குநர் பத்ரி.

“இந்தப் படத்தில் சிவா நடிக்கலையே..?” என்று கேட்டதற்கு. “அவருக்கேற்ற வேடமில்லை. அதனால்தான் நடிக்கவில்லை” என்கிறார் பத்ரி.

நடிப்பு பதவி போனாலும் பரவாயில்லை.. இந்தப் புள்ளை வசனம் எழுதியாவது பிழைச்சுக்கும்.

அதற்குப் பின் ஐயாவுக்கு ஏறுமுகம்தான்..

Our Score