full screen background image

அறிமுக ஹீரோ, ஹீரோயின் நடிக்கும் ‘மானிடன்’ படம்!

அறிமுக ஹீரோ, ஹீரோயின் நடிக்கும் ‘மானிடன்’ படம்!

ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மானிடன்’.

கதையின் நாயகனாக தினேஷ் சந்திரா என்ற புதுமுக நடிகர் நடித்திருக்கிறார். நாயகியாக சினேகா என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கண்ணபிரான், பாஸ்கர் லட்சுமி, ராகவன், மீசை ராஜா போன்ற புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

வில்லன் கதாபாத்திரத்தில் சேரன் ராஜ் நடித்திருக்கிறார். மேலும், வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

ஊருக்கு நீதியையும், நியாயத்தையும் வழங்கும் ஊர் பெரியவர் என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஜேம்ஸ் வில்லியம்ஸ் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவை சுரேஷ் ரங்கா, எடிட்டிங் – R.செல்வராஜ், இசை – செளந்தர்யன், லோக பத்மநாபன் அமைத்திருக்கிறார்கள். பாடல்களை வ.கருப்பன் எழுதியிருக்கிறார்.
நடனம் – ரத்னவேல், பத்திரிக்கை தொடர்பு – பெரு.துளசி பழனிவேல்.

பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா முதன்முறையாக இந்தப் படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகிற்கு புதிய இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊட்டி, தேனி போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

Our Score