பெரிய பட்ஜெட் படங்களுக்கு வருடத்தில் 10 நாட்கள் மட்டுமே ரிலீஸ் அனுமதி.!

பெரிய பட்ஜெட் படங்களுக்கு வருடத்தில் 10 நாட்கள் மட்டுமே ரிலீஸ் அனுமதி.!

நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் படங்களை திரையிடுவது சம்பந்தமாக ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்படி ஒரு படத்தின் பட்ஜெட் பதினைந்து கோடிக்கும் மேல் இருந்தால் அந்த படத்தை குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாம். 

ஜனவரி-1 (ஆங்கிலப் புத்தாண்டு தினம்), ஜனவரி-15 (பொங்கல் தினம்), ஜனவரி-26 (குடியரசு தினம்) ஏப்ரல்-14 (தமிழ்ப் புத்தாண்டு தினம்), மே-1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட்-15 (சுதந்திர தினம்), செப்டம்பர்-17 (விநாயகர் சதுர்த்தி தினம்), அக்டோபர்-21 (ஆயுத பூஜை தினம்), நவம்பர் 10 (தீபாவளி தினம்), டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ் தினம்) ஆகிய இந்த குறிப்பிட்ட தேதிகளில் மட்டும்தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்போதுதான் சிறிய பட தயாரிப்பாளர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு என்று சங்கத்தின் நிர்வாகிகள் கருத்து கூறியிருக்கிறார்களாம்.

நல்ல திட்டம்தான். முறையாக சரியான முறையில் செயல்படுத்தினால் நல்லதுதான்..! 

இதன்படி பார்த்தால் வரும் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸாகவதாக சொல்லப்பட்டிருக்கும் ‘உத்தமவில்லன்’ கதியென்ன என்பது தெரியவில்லை. இத்திட்டம் என்றிலிருந்து அமலுக்கு வரும் என்பதும் சொல்லப்படவில்லை. 

ஆனால் நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்குள்ளேயே தியேட்டர் பிடிக்க போட்டோ போட்டிகள் அதிகரித்து அது திரையுலகத்திற்குள் புகைச்சலை உண்டாக்கப் போகிறது. ஏன் தயாரிப்பாளர் சங்கத்திற்குள்ளேயே கலகமும் பிறக்க வாய்ப்பிருக்கிறது..!

இப்போதைய நிர்வாகிகள் எதையும் சமாளிப்பார்கள் என்று நம்பலாம்..

Our Score