‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘மீசைய முறுக்கு’..!

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘மீசைய முறுக்கு’..!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி அவருடைய துவக்கக் கட்டத்திலேயே அவர் உருவாக்கிய இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோக்களில் அவரே நடித்து அவரே இயக்கி வந்தார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘டக்கரு டக்கரு’ பாடல் வீடியோவிலும் தானே நடித்து இயக்கியிருந்தார்.

இயக்குநர் சுந்தர்.சி ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான ‘ஆம்பள’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், “ஆதிதான் என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ..” என்று கூறி இருந்தார்.

அதன் பின் ஆதியை நடிக்குமாறு கூறி வந்த இயக்குநர் சுந்தர்.சி., ‘டக்கரு டக்கரு’ வீடியோவை பார்த்துவிட்டு ஆதியிடம் “நீங்கள் நிச்சயம் நடிக்க வேண்டும்…” என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

அப்போது ஆதி தன்னிடம் இருந்த ஒரு கதையை இயக்குநர் சுந்தர்.சியிடம் கூற அவருக்கும் கதை பிடித்து போய் உடனே ஆரம்பிக்கப்பட்ட படம்தான், இந்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம்.

40 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, பாடல்கள் எழுதி, இயக்கி இதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் ஆதி. இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்திருக்கிறார்.

“இந்தப் படம் முழுக்க, முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமெடி, கருத்து, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கல்லூரி கதையில் உருவாகியிருக்கிறது. திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் படமாக்கப்பட்டிருக்கிறது…” என்கிறார் இயக்குநர் ஆதி.

Our Score