full screen background image

“லதா ரஜினி மீது பொய்யான புகார்..” – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் விளக்கம்..!

“லதா ரஜினி மீது பொய்யான புகார்..” – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் விளக்கம்..!

‘கோச்சடையான்’ படம் தொடர்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Ad bureau Advertising Private Limited Company சார்பில் அதன் நிர்வாகி அபிர்சந்த் நாகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகதில் இன்று ரஜினிகாந்தின் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார்.

இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த உரிமத்துக்குரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன்.

அந்த ஒப்பந்தத்தில் “இந்த ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் உரிமையை தயாரிப்பாளர் வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது. அதையும் மீறி வேறு யாருக்கேனும் உரிமையை அளித்தால், அதற்குரிய நஷ்ட ஈட்டை சம்பந்தப்பட்ட எனது கம்பெனிக்கு வழங்க வேண்டும். குறிப்பாக விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்..” என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த ஒப்பந்ததை மீறி முரளி மனோகர் வேறு ஒரு நிறுவனத்துக்கு கோச்சடையான் படத்தின் விநியோக உரிமைகளை விற்றார். இதையடுத்து நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டபோது, லதா ரஜினிகாந்தும், முரளி மனோகரும் படம் வெளியானதும் அந்தத் தொகையைத் தருவதாக என்னிடம் உறுதி அளித்தனர்.

நான் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால் படம் வெளியாகி ஓடி பல மாதங்களுக்குப் பின்னரும், இன்னமும் அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ. 10.2 கோடியைத் தரவில்லை. நான் எனது பணத்தை பல முறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

எனவே காவல்துறை அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்..” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து கோடம்பாக்கம் சுறுசுறுப்பாகி வாதப் பிரதிவாதங்கள் ஆங்காங்கே கிளம்பிக் கொண்டிருக்க சற்று நேரத்திற்கு முன்பாக இது தொடர்பாக கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இது குறித்து தங்களது தரப்பு நியாயத்தை செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

அந்தச் செய்தி இங்கே :

Image converted to PDF format.

Our Score