அதிரடி வில்லி கேரக்டரில் சோனியா அகர்வால்..!

அதிரடி வில்லி கேரக்டரில் சோனியா அகர்வால்..!

ஸ்ரீஸ்ரீகணேஷா  கிரியேசன்  என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ள திரைப்படம் ‘உன்னால் என்னால்.’

இந்தப் படத்தில்  ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக  நடித்துள்ளனர். முக்கிய வேடமொன்றில் இயக்குநர் A.R.ஜெயகிருஷ்ணா நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா,  நிகாரிகா, சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.

மற்றும் ராஜேஷ், ரவி மரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சோனியா அகர்வால் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – கிச்சாஸ், இசை – முகமது ரிஸ்வான், பாடல்கள்  – தமிழமுதன்,  கருணாகரன்,  பொன் சீமான், படத் தொகுப்பு – M.R.ரெஜிஷ், கலை இயக்கம் –விஜய் ராஜன், நடனம் – கௌசல்யா, சண்டை பயிற்சி – பில்லா ஜெகன். தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன், தயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா, கதை,  திரைக்கதை,  வசனம்,  இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா.

DSC_0170                            

படம் பற்றி இயக்குநர் ஜெயகிருஷ்ணா பேசும்போது, “பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்றுதான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.  ஆடம்பரத்துக்கும், பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத்தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ். இவரிடம் செயலாளராக பணியாற்றும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்துவிட்டு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ், ஜெய கிருஷ்ணா மூவரும்.

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் கதை. வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். ‘உன்னால் என்னால்’ படம் வித்தியாசமாக இருக்கும்…” என்றார் இயக்குநர்.

Our Score