கடந்த மாதம் 2020 டிசம்பர் 23-ம் தேதியன்று மாஸ்டர் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் ‘U / A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
சென்சாரும் ச்சும்மா கிடைக்கவில்லை. படத்தில் பலவித காட்சிகளை நீக்கிய பின்பும், பல வசனங்களை மியூட் செய்த பின்பும்தான் சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
படத்தில் விஜய் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘பவானி’ என்பது இந்தச் சான்றிதழின் மூலம் அறிந்த ஒரு உண்மை.

படத்தின் கதை என்னவென்று விசாரித்தபோது, “ஒரு அரசுக் கல்லூரியின் விடுதியில் வார்டனாக பணியில் சேரும் விஜய் அங்கே நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதுதான் கதை…” என்கிறார்கள்.
படத்தின் நீளம் 178.35 நிமிடங்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போதைய கமர்ஷியல் திரைப்படங்கள் நீளமாக இருப்பது ரசிகர்களுக்கு தியேட்டரில் பெரும் அயர்ச்சியைக் கொடுக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் பலரும் கருத்துச் சொல்லி வரும் வேளையில் அவர்களே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடவிருப்பது ஆச்சரியம்தான்..!!!