full screen background image

தமிழ்ச் சினிமாவி்ன மசாலாக்களை கிண்டல் செய்யும் ‘மசாலா படம்’..!

தமிழ்ச் சினிமாவி்ன மசாலாக்களை கிண்டல் செய்யும் ‘மசாலா படம்’..!

சினிமா என்பது இயல், இசை, நாடகம் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லட்சுமண் குமார் இயக்கியிருக்கும் படம்தான் இந்த ‘மசாலா படம்’ திரைப்படம்.

படம் பற்றி பேசிய இயக்குநர் லட்சுமண் குமார், “வெற்றி பெரும் மசாலா படங்கள் எதற்காக வெற்றி பெறுகிறதென்று எவராலும் சுட்டிக் காட்டுதல் கடினம். அப்படிப்பட்ட மசாலா படங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று நானும் தயாரிப்பாளர் விஜய் முடிவு செய்து எடுக்க ஆரம்பித்ததே மசாலா படம்.

படத்துல ஒவ்வொரு பிரதான கதாபாத்திரமும் மசாலா படங்களில் வரும் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என ஒரு விஷயத்தைச் சொல்லும்.

தனது நடிப்பில் குறும்புடன், நகைச்சுவையை அள்ளி வழங்கும் மிர்ச்சி சிவா, வசனங்களில் தனது பிரத்தியேக உச்சரிப்பின் மூலம் கலக்கும் சிம்ஹா, குறைவான வசனங்களுடன் ஆக்சன் பகுதி, பல வருடங்களாய் தமிழ் படங்களின் கதை கருவாய் கெளரவம் நடிக்கும் ‘காதல்’ பகுதி, குடும்பங்களை திரையரங்கிற்கு இழுத்து வரும் ‘செண்டிமெண்ட்’ பகுதிக்கு லட்சுமி தேவி என இப்படி கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளோம்..

‘ஜிகர்தண்டா’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களை ‘நியு ஏஜ் சினிமாக்கள்’ என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய நியு ஏஜ் சினிமாக்களின் பாணியில் தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலாக்களை கலந்து சொல்லியிருக்கிறோம்.

படத்தின் தயாரிப்பாளர் முதல் நடித்த நடிகர்கள்வரை அனைவரும் நண்பர்களே. படம் எடுத்ததே ஒரு டூர் போல் இருந்தது. அனைத்து மசாலா படங்களை போலவே எங்கள் படமும் ஃபேமிலி ஆடியன்சிற்கு உகந்த படம்தான்..” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Our Score