full screen background image

மருதநாயகம் மீண்டும் துவங்கவிருக்கிறது.. கமல்ஹாசன் அறிவிப்பு..!

மருதநாயகம் மீண்டும் துவங்கவிருக்கிறது.. கமல்ஹாசன் அறிவிப்பு..!

1997-ம் ஆண்டு பிரிட்டிஷ் மகாராணியாரின் தலைமையில் நடத்தப்பட்டது ‘மருதநாயகம்’ படத்தின் துவக்க விழா.

ஆண்டுகள் ஓடியும் அதற்குப் பின் படம் நகரவில்லை. துவக்கத்திலேயே சுமாராக 10 கோடி ரூபாயை முழுங்கிய ‘மருதநாயகம்’ படம் அதற்கு பிறகு பணத் தேவைகள் அதிகமாகும் என்று எண்ணத்தில் மூ்டடை கட்டி வைக்கப்பட்டது.

அந்தப் படம் தனது வாழ்நாள் லட்சியம் எ்ன்று சொல்லும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் ‘மருதநாயகம்’ உயிர் பெற இருப்பதாக இன்றைய ‘குமுதம்’ பத்திரிகையில் தனது கேள்வி-பதில் பகுதியில் அறிவித்துள்ளார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கேட்ட மூன்றாவது கேள்விக்கான பதில் மூலம்தான் இது வெளிவந்துள்ளது.

“மருதநாயகத்தைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள் எங்களை காக்க வைக்கப் போகிறாய்..?” என்று கேட்டிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் சொல்லியிருக்கும் பதில் :

“ஒருவேளை நீங்கள் இந்தக் கேள்வியை எழுதிக் கொண்டிருந்த பொழுதாகக் கூட இருக்கலாம். லண்டனிலிருந்து என் பெரும் தொழிலதிபர் நண்பரின் தொலைபேசி விளிப்பு வந்தது. Out of blue என்பார்களே அந்த மாதிரி.. ‘எனக்கு உங்க மருதநாயகம் படத்தைத் தயாரிக்க விருப்பம்..’ என்றார். ‘நிறைய செலவாகுமே..?’ என்றேன். ‘அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும்தான்..’ என்றார் நண்பர். தமிழ் ரசிகர்கள் சார்பில் நீங்கள் ஆசைப்பட்டது நடக்கும்.”

கொண்டு வாருங்கள்.. காத்திருக்கிறோம்..!!

Our Score