மறைந்த இயக்குநர் மகேந்திரனின்  நினைவு நூலை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..!

மறைந்த இயக்குநர் மகேந்திரனின்  நினைவு நூலை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..!

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசும்விதத்தில் ‘சொல்லித் தந்த வானம்’ என்கிற நூல் உருவாகியுள்ளது.

இந்த நூலில் இயக்குநர் மகேந்திரன் பற்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது அனுவபங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மூத்தப் பத்திரிகையாளர் அருள்செல்வன் இதனைத் தொகுத்து எழுதி இருக்கிறார்.

இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று எளிமையாக நடைபெற்றது .

இந்த நூலை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, மறைந்த இயக்குநர் மகேந்திரனின் சீடரான, இயக்குநர் ‘யார்’ கண்ணன் அதனைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா,  ஏ.வெங்கடேஷ், சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா, கவிஞர் விவேகா, பின்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

IMG_7885

IMG_78691

IMG_7893

IMG_7869

Our Score