ABICKA ARTS நிறுவனத்தின் சார்பில் ‘மறைமுகம்’ என்ற திரைப்படம், முற்றிலும் வித்தியாசமாக ஆக்ஷன், திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாகிறது.
இந்த படத்தை வி.ஜீவகன், A.P.ஷர்வின் இணைந்து தயாரிக்க, உமேரா பேகம் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா மற்றும் தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள்.
காமெடி நடிகர் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், ‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேஷ், பிரியதர்ஷினி, தேவி, கண்ணன், ஜீவகன், உமேரா பேகம், குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விஜய் திருமூலம், இசை – வசந்த். A.P.ஷர்வின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
“70 வருட தமிழ்த் தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக் களம் கொண்ட படமாக இந்த மறைமுகம் திரைப்படம் இருக்கும்” என்கிறார் இயக்குநர் A.P.ஷர்வின்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.