full screen background image

T.T.F. வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மஞ்சள் வீரன்’ திரைப்படம்

T.T.F. வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மஞ்சள் வீரன்’ திரைப்படம்

தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டரான கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் படம் ‘மஞ்சள் வீரன்’.

இந்தப் படத்தில் தற்போதைய 2K கிட்ஸின் நிஜ கதாநாயகனான பிரபல வைரல் யூ டுயுபர் T.T.F.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.

ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், நடன இயக்கம் – ஸ்ரீதர், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குநர் செல் அம். இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘மஞ்சள் வீரன்’.

T.T.F.வாசனின் பிறந்த நாளான நேற்று இந்த ‘மஞ்சள் வீரன்’ படத்தின் பூஜையும், FRIST LOOK வெளியீடும் நடைபெற்றது.

ஜூலை மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

 

Our Score