full screen background image

நடிப்பு வரலை-இயக்குநர் சரியில்லை-மனீஷா யாதவ்-சீனுராமசாமி மோதல்..!

நடிப்பு வரலை-இயக்குநர் சரியில்லை-மனீஷா யாதவ்-சீனுராமசாமி மோதல்..!

இயக்குநர் சீனு ராமசாமி. கேமிரா கவிஞர் பாலுமகேந்திராவின் சீடர். இதுவரையிலும் 3 படங்களை இயக்கியுள்ளார்.   2007-ம் ஆண்டு ‘கூடல் நகர்’ படத்தை இயக்கினார். பின்பு ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களை இயக்கியவர். இப்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற பெயரில் படம் இயக்க ஆயத்தமாகியிருக்கிறார்.  இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஹீரோயினாக ‘வழக்கு எண் 18/9’ மற்றும் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடித்த  மனீஷா யாதவ் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங் கொடைக்கானலில்  4 நாட்களுக்கு முன்பு துவங்கியது.

manishayadhav

ஷூட்டிங் துவங்கி 3 நாட்கள் மட்டுமே அதில் நடித்த ஹீரோயின் மனீஷா யாதவ், இப்போது சென்னைக்கு பறந்து வந்து இயக்குநர் சீனு ராமசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

1 மாதத்திற்கு முன்பாகவே மனீஷாவை வைத்து இந்தப் படத்திற்காக ஆடிஷன் டெஸ்ட்டை 3 முறை  நடத்தினாராம் சீனு ராமசாமி.   அப்போதெல்லாம் “நல்லா நடிக்கிற..” என்று சொல்லிவிட்டுத்தான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

ஆனால் கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக நடந்த ஷூட்டிங்கிற்கு பின்பு நேற்று காலை திடீரென்று “உனக்கு நடிப்பு சரியா வரலை. அதுனால பெங்களூருக்கு டிக்கெட் போட்டாச்சு.. நீங்க ஊருக்கே போங்க. நாங்க வேற ஆளை பார்த்துக்குறோம்..” என்று சொல்லிவிட்டாராம்..

இதையும் அவரே நேரில் சொல்லாமல் படத்தின் தயாரிப்பு நிர்வாகி மூலமாகச் சொல்லச் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக மனீஷா, இயக்குநர் சீனு ராமசாமியுடன் போனிலேயே காரசாரமாக சண்டையிட்டிருக்கிறார். இந்த மோதலில் வார்த்தைகள் தடித்துப் போகவே கோபமான மனீஷா பெங்களூர் செல்லாமல் சென்னை வந்து சீனு ராமசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.  (புகாரில் என்ன சொல்லியிருக்கிறார் என்று முழுமையாக தெரியவில்லை)

புகாரை வாங்கிக் கொண்ட சங்கத்தினர், “அவங்க சங்கத்துக்கு கடிதம் அனுப்பி மேற்கொண்டு பேசுவோம்…” என்று சொல்லியிருக்கிறார்களாம். “இரண்டு பெரிய இயக்குநர்களின் படத்தி்ல் நடித்திருக்கிறே்ன். நடிப்பு வரலைன்னு யாராச்சும் சொல்வாங்களா..? சீனு ராமசாமி இப்படி சீப்பாக நடந்துக்கிட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக்” கூறுகிறார் மனீஷா யாதவ். 

இது பற்றி இயக்குநர் சீனு ராமசாமியிடம் விளக்கம் கேட்டோம். “மனீஷாவை டெஸ்ட் எடுத்துதான் அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த கொடைக்கானல் அட்மாஸ்பியரில் மனீஷாவின் அப்பீயர்ன்ஸ் அந்தக் கேரக்டருக்கு சரியா செட் ஆகலை.. மலைவாழ் பெண்ணொருத்தியின் முகத்தை மனீஷாவின் மூலமாக என்னால் கொண்டு வர முடியலை. அதுனால அந்த மெயின் கேரக்டர் இல்லாம வேறொரு கேரக்டர் இருக்கு. அதுல நடிக்கிறியாம்மான்னு கேட்டேன். அந்தப் பொண்ணு அது முடியாதுன்னு சொல்லியிருச்சு.. என்னாலும் எனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியலை. அதுனால முறைப்படி டிக்கெட் எடுத்து கொடுத்து ஊருக்குப் போகும்படி சொல்லிவிட்டேன். இப்போ மனீஷா, அந்த செகண்ட் ஹீரோயினா நடிக்க வந்தால்கூட நடிக்க வைக்க நான் ரெடி…” என்றார்..

Our Score