பலகட்ட, கெட்ட, கட்டப்பஞ்சாயத்துகளுக்குப் பின்பு இன்றைய மாலை காட்சியில் இருந்து ‘நிமிர்ந்து நில்’ தியேட்டர்களில் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த 2 நாட்களாக கோடம்பாக்கத்தில் பதற்றத்தை உண்டு செய்த இந்தப் படத்தின் போக்கு, இப்போதைய தயாரிப்புப் பணியில் இருப்பவர்களையே கதிகலங்க வைத்துவிட்டது..
பெரிய தயாரிப்பு, பெரிய இயக்குநர், பெரிய நடிகர் என்று இருந்தால்கூட பிரச்சினைகள் எந்தப் பக்கமிருந்து வரும் என்பது தெரியாது என்ற பயமே புதுமுக தயாரிப்பாளர்களைச் சூழ்ந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் தனது திரைப்படம் வெளியாக வேண்டி பல பிரச்சினைகளையும், பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருந்த சூழலில் இயக்குநர் சமுத்திரக்கனியை பற்றியும் நேற்றைக்கு யாரோ கிளப்பிவிட்ட வதந்தியும் கேவலமானது. அது வதந்தி என்று சொன்ன பின்பும் உண்மையா என்று கேட்டு இணையத்தில் எழுதியும், கேட்டவர்களை என்னவென்று சொல்வது..?
நேற்று முன்தினம் சினிமா பிரபலங்களுக்காக போடப்பட்ட காட்சியில் படம் பார்த்த கோடம்பாக்கத்து புள்ளிகள் படம் முதல் பாதியில் பறக்கிறது.. மொத்தமாக பட்டையைக் கிளப்பும் படம் என்று நேற்றைக்கே சூட்டை கிளப்பிவி்ட்டார்கள். காத்திருப்போம். நிமிர்ந்து நில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..