யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் ‘மண்டேலா’

யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் ‘மண்டேலா’

‘மாரி’ படத்தின் இயக்குநரான பாலாஜி மோகன் முதன்முதலாக தயாரிக்கும் திரைப்படம் ‘மண்டேலா.’

‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாலாஜி மோகன் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, மாரி-2 ஆகிய படங்களையும் இயக்கினார்.  

சமீபத்தில் ‘ஓபன் விண்டோ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார் பாலாஜி மோகன். தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘மண்டேலா’ என்று தலைப்பு வைத்துள்ளார் பாலாஜி மோகன்.

இந்தப் படத்தை பாலாஜி மோகனின் ஓப்பன் விண்டோ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

Mandela Pooja Photo

இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் – எஸ்.சசிகாந்த், இணை தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமச்சந்திரா, நேரடி தயாரிப்பு – பாலாஜி மோகன், ஒளிப்பதிவு – விது அய்யனா, இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – ராமு தங்கராஜ், உடைகள் வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், பாடல்கள் – யுகபாரதி, அறிவு, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், புகைப்படங்கள் – ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – கைலாஷ் சோமசுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – எல்.மார்ட்டின் ரெக்ஸ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் இயக்குகிறார். இவர் இயக்கிய ‘தர்மம்’ என்னும் குறும்படத்திற்கு 2013-ம் ஆண்டு சிறந்த குறும் படத்திற்கான தேசிய விருது பட்டியலில் சிறப்பு விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க, முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ‘மண்டேலா’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

Our Score