திரையுலகத் தேவதைகளை துயரத்தோடு பார்க்க நேர்வது அவர்களது ரசிகர்களுக்கு பெருஞ்சோகமான விஷயம்தான்.. மலையாள படவுலகில் ஜென்டில்வுமன்ஷிப் கேரக்டர்களில் நடிக்க இவரைவிட்டால் ஆளே இல்லை என்ற நிலையில் இருக்கும் மம்தா மோகன்தாஸ், தன்னைப் பீடித்திருக்கும் கேன்சர் நோயை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்..!
2005-ம் வருடம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான மம்தா, 2006-ம் ஆண்டு கரு.பழனியப்பனின் ‘சிவப்பதிகாரம்’ படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். அப்புறம் இரண்டாண்டுகள் கழித்து ‘குசேலன்’ படத்தில் சின்ன வேடத்திலும், 2013-ம் வருடம் ‘தடையறத் தாக்க’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
2009-ம் வருடம் அவரை கேன்சர் நோய் தாக்கியது.. அன்றிலிருந்து தொடர் சிகிச்சையெடுத்து வந்தார். அந்த நிலையில் தனது பால்ய கால நண்பரான ரஞ்சித்தை 201-ம் வருடம் திருமணம் செய்து, சரியாக ஒரு வருடம் கழித்தே இதே நோயின் காரணமாக டைவர்ஸும் செய்துவிட்டார்.
இதன் பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், இப்போது கொஞ்சம் பிரேக் விட்டு கீமோதெரபி சிகிச்சைக்காக போய் வந்திருக்கிறார். அந்தச் சிகிச்சை செய்தாலே முடிகள் உதிர்ந்துவிடும்.. விக் வைத்து படங்களின் கன்டினியூட்டியை செட் செய்து கொள்கிறாராம்.. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும் 14-ம் தேதி கேரளா திரும்பும் அவர் அனில்பாபுவின் புதிய மலையாளப் படத்தில் நடிக்கவிருப்பதாக தனது ரசிகர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்..!
வாங்க மேடம்.. கேன்சரோ.. நோயோ.. அதை எதிர்கொண்டு தினமும் பணியாற்றுவதே ஒரு சவாலான விஷயம்.. கேன்சர் நோயாளிகள் அறிய வேண்டியதும் இதுதான்.. மம்தாவிடமிருந்து ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான் இதுதான்..!









