இந்தாண்டின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது கோலிசோடா..
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வாங்கி வெளியிட்ட படம் இது. ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனின் சொந்த் தயாரிப்பு.. மிகக் குறைந்த பட்ஜெட்டில்(அதிகபட்சம் 2 கோடிக்குள்) தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டுமே 8 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம்.. பட்ஜெட் தொகையைவிட 4 மடங்கு வசூலித்திருக்கிறது.
துவக்கத்தில் 100-க்கும் குறைவான தியேட்டர்களிலேயே திரையிடப்பட்ட கோலிசோடா, 4-வது நாளிலேயே தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இப்போதுவரையிலும் பல ஊர்களிலிருந்தும் பெட்டி கேட்டு வாங்கப்பட்டு திரையிடப்படுகிறதாம்.. ஒரு நல்ல படைப்புக்கு மக்கள் கொடுக்கும் நல்ஆதரவிற்கு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பே உதாரணம்..!
அடுத்து வரக் கூடிய காலங்களிலாவது மக்களை குறை சொல்லாமல் இது போன்ற தரமான படைப்புகளை தயாரித்து, வெளியிட்டால் நிச்சயம் தமிழ்த் திரையுலகம் செழித்து வளரும்..!