full screen background image

‘பாம்பாட்டம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்தின் அசத்தல் லுக்..!

‘பாம்பாட்டம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்தின் அசத்தல் லுக்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 30 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராகும் படம் ‘பாம்பாட்டம்’.

நான் அவன் இல்லை’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜீவன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

மேலும், சுமன், சரவணன், ரமேஷ் கண்ணா, வெங்கட் என ஏரளாமான நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்.

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷராவத் தமிழில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் ‘இளவரசி நாகமதி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் பர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் மல்லிகா ஷெராவத் குதிரையில் வருவது போல் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதையில் இப்படம் தயாராகி வருகிறது.

இதனால் பெரும் பொருட்செலவில் செட்டுகள் அமைத்து சிஜிக்கு மிக முக்கியம் கொடுத்து  தயாரிக்கப்படுகிறது.

தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

 
Our Score