full screen background image

வித்தியாசமான முடிவுடன் வரும் காதல் திரைப்படம் ‘மழையில் நனைகிறேன்’..!

வித்தியாசமான முடிவுடன் வரும் காதல் திரைப்படம் ‘மழையில் நனைகிறேன்’..!

Rajsree Ventures  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் B.ராஜேஷ் குமார் மற்றும் வித்யா ஆகியோர்  இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மழையில் நனைகிறேன்.’

இந்தப் படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்கள். மேலும், ‘ஷங்கர் குரு’ ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – J.கல்யாண், இசை – விஷ்ணு பிரசாத், படத் தொகுப்பு – G.B. வெங்கடேஷ், கலை இயக்கம் – N.மகேந்திரன், பாடல்கள் – லலிதானந்த், முத்தமிழ், உடை வடிவமைப்பு – வித்யா ராஜேஷ், சண்டை இயக்கம் – T.ரமேஷ், புகைப்படங்கள் – P.M.கார்த்திக், வசனம் – விஜி, கெவின் பாண்டியன், கதை, திரைக்கதை, இயக்கம் – டி.சுரேஷ் குமார்.

IMG_2610

அறிமுக இயக்குநரான T.சுரேஷ் குமார் இந்தப் படம் குறித்து  பேசும்போது, “இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும்.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள்தான்  வெகு பிரபலம்.

IMG 155

காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக் கதைகளாக உலா வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டு களியுங்கள்.

உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள்.

‘மழையில் நனைகிறேன்’ திரைப்படம் அதன் தலைப்பைப் போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது..” என்றார்.

Our Score