full screen background image

“நள்ளிரவில் நடிகையின் அறைக்குள் நுழைந்த ஹோட்டல் ரூம் பாய்” – திரைப்பட இயக்குநர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!

“நள்ளிரவில் நடிகையின் அறைக்குள் நுழைந்த ஹோட்டல் ரூம் பாய்” – திரைப்பட இயக்குநர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!

மலையாளத் திரைப்பட இயக்குநரான ஆலப்பே அஷ்ரப், ஒரு மலையாள நடிகை பற்றி பரபரப்புச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார்.

“மலையாள சினிமாவில் இருக்கும் பெண்களின் உரிமைகளைக் காப்பதற்காக 2017-ம் வருடம் துவக்கப்பட்ட WCC (Women in Cinema Collective)-யை நிறுவிய நடிகைகளில் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்தது. ஆனால் அதை அந்த நடிகை ஹேமா கமிட்டியிடம் சொல்லவில்லை…” என்று குற்றம் சாட்டியுள்ளார் மலையாளத் திரைப்பட இயக்குநரான ஆலப்பே அஷ்ரப்.

இது பற்றி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அஷ்ரப் அந்தப் பேட்டியில் கூறியியிருப்பது இதுதான் :

“படப்பிடிப்பிற்காக அந்த நடிகை ஆழப்புழாவிற்கு வந்திருந்தார். அவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​குட்டநாட்டைச் சேர்ந்த ரூம் பாய் ஒருவரிடம் கொஞ்சம் அன்பாகப் பேசி பழகினார்.

இருப்பினும், ஒரு நாள் இரவு நடிகை தனது அறையில் தனியாக இருந்தபோது, ​​​​அந்த ரூம் பையன், நள்ளிரவில் கவுண்டரில் இருந்து உதிரி சாவியை எடுத்துக் கொண்டு அந்த நடிகையின் அறைக்குள் நுழைந்தான்.

நடிகை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் அமர்ந்து சிறிது நேரம் நடிகை உறங்கிக் கொண்டிருப்பதை ரசித்துப் பார்த்திருக்கிறான். பிறகு, சிறுவன் அவளை மெதுவாகத் தொட்டான். நடிகையும் விழித்துக்கொண்டு ரூம் பாயின் முகத்தைப் பார்த்ததும் அலறினார்.

சிறுவன் பீதியடைந்து அறையைவிட்டு வெளியில் ஓடினான். நடிகையும் அவனைப் பின் தொடர்ந்து வந்து கத்தினார். அதற்குள் ஹோட்டலில் இருந்த அனைவரும் விழித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

ஹோட்டலில் இருந்த அனைவரும் நடிகையிடம் நடந்ததை அறிந்து கொண்டு போலீஸை வரவழைத்தனர். உடனே போலீசாரும் வந்து அந்த ரூம் பையனை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான் அந்தப் பையன். அவன் மீது எஃப்.ஐ.ஆரும் தயாரிக்கப்பட்டது.

ந்த இடத்தில் இந்தக் கதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. தனது புகாரை வாபஸ் பெற விரும்புவதாகவும், வழக்கை முடித்துக் கொள்வதாகவும் அந்த நடிகை திடீரென்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றித் தெரிந்த அனைவரிடமும் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்றும் அந்த நடிகை கேட்டுக் கொண்டார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தனக்குக் கெட்டப் பெயர் வந்துவிடுமோ என்று பயந்துவிட்டார்.

இதில் நகைச்சுவையான விஷயம் என்னவெனில் மலையாள சினிமாவுலகத்தில் இருக்கும் பெண்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்களுக்குக் குரல் கொடுப்பதற்காகவும் துவங்கப்பட்ட WCC என்னும் அமைப்பை உருவாக்கிய அமைப்பு உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்பதுதான்.

WCC கமிட்டியின் பவுண்ட்டிங் மெம்பர் என்ற போதிலும் இந்தச் சம்பவம் பற்றி அவர் ஹேமா கமிட்டி முன்புகூட எதுவும் பேசவில்லை என்பது முரணானது.

மலையாளத் திரையுலகில் துன்புறுத்தல், புறக்கணிப்பு மற்றும் வலியால் பாதிக்கப்பட்ட நடிகர்களை அடையாளம் காண முன்னணி பெண் நடிகர்கள் குழு முன்முயற்சி எடுத்து, ஹேமா கமிட்டியின் முன் சாட்சியம் அளிக்க அவர்களை ஊக்கப்படுத்தியது. WCC-க்கு சமூகத்தின் ஆதரவும் உள்ளது.

ஆனால் அந்தக் குழுவின் ஸ்தாபக உறுப்பினரே தனது சொந்த அனுபவத்தைப் பற்றி வெளியில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். மலையாளத் திரையுலகில் இது போன்ற சம்பவங்கள் வேறு யாருக்காவது நடந்ததாகத் தெரியவில்லை.

ஒரு அமைப்பை வழிநடத்துபவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நடிகை அவர் உருவாக்கிய WCC-ன் நோக்கத்தையே தோற்கடித்துவிட்டார்..” என்று குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் ஆலப்பே அஷ்ரஃப்.

2017-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த The Women in Cinema Collective (WCC) என்னும் அமைப்பை நடிகைகள் ரீமா கல்லிங்கல், பார்வதி திருவோத்து, கீது மோகன்தாஸ், பத்மப்பிரியா, ரேவதி, மற்றும் இயக்குநர் அஞ்சலி மேனன், தொழில் நுட்பக் கலைஞர்களான பீனா பால், தீதி தாமோதரன் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள்.

இந்தப் பரபரப்புப் புகாரை கூறியிருக்கும் இயக்குநர் ஆலப்பே அஷ்ரப், ஆனந்த்பாபு, சுகன்யா நடிப்பில் உருவாகி 1991-ம் ஆண்டில் வெளியான எம்.ஜி.ஆர். நகரில்’ என்ற தமிழ்த் திரைப்படத்தையும், பாண்டியராஜன், ராஜஸ்ரீ  நடிப்பில் உருவாகி 1995-ம் ஆண்டு வெளியான ‘நீலக்குயில்’ என்ற தமிழ்ப் படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score