full screen background image

நிவின் பாலியின் ‘மாஹாவீர்யார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

நிவின் பாலியின் ‘மாஹாவீர்யார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

புகழ் பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, மஹாவீர்யார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும்  Indian Movie Makers சார்பில் P.S.சம்னாஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் S.குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா P.அம்பு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சந்துரு செல்வராஜ், இசை – இஷான் சாப்ரா, படத் தொகுப்பு – மனோஜ், ஒலி வடிவமைப்பு – Sound Factor சார்பில்  விஷ்ணு கோவிந்த் மற்றும் ்ரீ சங்கர், கலை இயக்கம் – அனீஷ் நாடோடி, உடைகள் – சந்திரகாந்த் சொனாவானே, மெல்வி.J, ஒப்பனை – லிபின் மோகனன், புரொடெக்சன்ஸ் கன்ட்ரோலர் – L.B.ஷ்யாம் லால், ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர்  அப்ரித் ஷைனி இருவரும் ‘1983’ மற்றும் ‘ஆக்சன் ஹீரோ பிஜு’ படங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக் குழு உறுதியளித்துள்ளது.

கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர்  M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.

திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநரான அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ்ரீவஸ்தவா மற்றும் இணை தயாரிப்பாளர் P.S.சம்னாஸ் ஆகியோர் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

இப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தின் மத்தியில், ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

Our Score