full screen background image

சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் ‘மஹா’ படம் விரைவில் வெளியாகிறது..!

சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் ‘மஹா’ படம் விரைவில் வெளியாகிறது..!

நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து, நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மகா’ திரைப்படம் திரைக்கு வர தயாராகிவிட்டது.

இந்தப் படத்தை Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். சிம்பு மற்றும் ஹன்சிகாவைத் தவிர, பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியும் மகா படத்தில் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் தம்பி ராமையா, கருணாகரன், நாசர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – J.லக்‌ஷ்மன், படத் தொகுப்பு – J.R.ஜான் ஆப்ரஹாம், கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை, பாடல்கள் –  கார்க்கி, விவேகா, நடன இயக்கம் – ஷெரீஃப், காயத்திரி ரகுராம்.

இந்த மகா’ ஹன்சிகா மோத்வானியி 50-வது மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25-வது படமாகும்.

இந்தப் படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

தற்போது இந்த மகா’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ON SKY நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Our Score