மதுரை ஸ்டைலில் உருவாகியிருக்கும் ‘மதுரக்காரங்கே’..!

மதுரை ஸ்டைலில் உருவாகியிருக்கும் ‘மதுரக்காரங்கே’..!

ராஜா ராணி மூவிஸ் நிஷா வழங்கும் சபரி மலை சாஸ்தா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘மதுரக்காரங்கே’ என்கிற புதிய திரைப்படம் திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. 

இந்தப் படத்தில் சதீஷ், ரவி, பாண்டி, சங்கர், மணி ஆகியோர் புதுமுக கதாபாத்திரத்திலும், கதாநாயகிகளாக  தாரணி, பவிஷா  மற்றும் வில்லனாக முருகனும் அறிமுகமாகியுள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஸ்வரன், இசை – S.B.A. ரியாஸ் காதிரி, பாடல்கள் – ஆளி, S.B.A. ரியாஸ் காதிரி, நடனம் – பவர் சிவா, சண்டை  – சைதை குணா, மக்கள் தொடர்பு – செல்வரகு, கதை, திரைக்கதை – P.ரவி, தயாரிப்பு – P.ரவி, P.M.சூர்யா,  வசனம், இயக்கம் – வீரமணி பிரபு.

படத்தில் இசையமைப்பாளர் S.B.A. ரியாஸ் காதிரியின் தேனான இசையில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்களை கிருஷ்ணராஜ், வேல்முருகன், சின்ன பொண்ணு, சாய் சரண், சத்யபிரகாஷ், பத்மா  ஆகியோர் பாடியுள்ளனர் .

ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தால்தான் அழிவான் என்பதை உணர்த்தும் கதை இது.  பாசத்தின் காரணமாக ஐந்து நண்பர்கள் தங்களது ஏரியா தாதாவிடம் சேர்கிறார்கள். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத சூழலில் தாதாவிற்காக கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஒருகட்டத்தில் மனம் திருந்தி தற்போதைய தங்களது தவறான பாதையில் இருந்து விலகி திருந்த நினைக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வில்லன் தாதா இவர்களில் இரண்டு பேரை கொலை செய்கிறான். மீதியிருக்கும் மூறு பேரும் வில்லனிடமிருந்து தப்பித்தார்களா..? அல்லது வில்லன் கொல்லப்பட்டானா என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, கம்பம்  ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

இத்திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் தமிழகமெங்கும் திரையிடப்படுகிறது.

Our Score