full screen background image

A.R.ராகவேந்திரா இயக்கியுள்ள சுயாதீன படம் ‘மாயக்கூத்து’!

A.R.ராகவேந்திரா இயக்கியுள்ள சுயாதீன படம் ‘மாயக்கூத்து’!

ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான டெல்லி கணேஷ், மு.ராமசாமி மற்றும் சாய் தீனா நடிகர் நாகராஜன் மற்றும் வளரும் நடிகர்களான பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் ரேகாஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘கயமை கடக்க’, ‘சூப்பர் டூப்பர்’ மற்றும் ‘நீத்தோ’ படங்களின் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘கேப்டன் மில்லர்’, ‘டான்’ மற்றும் ‘சாணி காயிதம்’ படங்களின் படத் தொகுப்பாளரான நாகூரன் ராமசந்திரன் இந்த படத்தின் படத் தொகுப்பினைச் செய்துள்ளார்.

இசையில் பல்வேறு துறைகளிலும் வடிவங்களிலும் நிபுணத்துவம் கொண்ட அஞ்சனா ராஜகோபாலன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். அவரது இசைக்கு  நாகராஜன் மற்றும் கேபர் வாசுகி பாடல்களை எழுதி உள்ளனர்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநரான A.R.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இவர், திரைப்பட இயக்குநர் பிரம்மா அவர்களிடம் உதவியாளராகவும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல குறும் படங்களை இயக்கிய அனுபவமும் கொண்டவர். மேலும், இவர் கதையில் உருவான “உடன் பால்” என்ற திரைப்படம் பல முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக் காட்டும்  இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது.

படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்து, இப்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Our Score