full screen background image

இயக்குநர் வ.கெளதமன் இயக்கும் ‘மாவீரா’ திரைப்படம்

இயக்குநர் வ.கெளதமன் இயக்கும் ‘மாவீரா’ திரைப்படம்

மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான இயக்குநர் வ.கௌதமன், கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படங்களுக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் மாவீரா.’

வி.கே.புரடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த மாவீரா’ படத்தின் ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், சண்டை இயக்கத்தை ஸ்டண்ட் சில்வாவும், படத்தொகுப்பை ராஜா முகமதுவும், பத்திரிகை தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்.

“தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்புபடுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக இத்திரைப்படம் இருக்கும்…” என இயக்குநர் வ.கெளதமன் உறுதிபட தெரிவித்தார்.

இந்த மாவீரா குறித்து மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், “என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு’, ‘முந்திரிக்காடு’, ‘வன்னிக்காடு’ பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும்தான்.

‘சந்தனக் காட்டு‘ மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். ‘முந்திரிக்காடு’, ‘வன்னிக்காடு’ மட்டுமே மீதமுள்ளது. ‘அத்து மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும், மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீர வரலாறே இந்த ‘மாவீரா’ திரைப்படம்.

கதை கேட்ட கணத்திலேயே இசைப் பொறுப்பேற்ற ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும், ‘உனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே இப்படைப்பு ஒரு தலை நிமிர்வு’ என்று வாழ்த்தியதோடு, ‘புலிக்கொடி எங்கக் கொடி – நாங்க பூமிப் பந்தின் ஆதிக்குடி’ எனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப் பாடும் பாடலாக எழுதித்தந்து எனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும் கவிஞர் வைரமுத்துவுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்…” என்றார்.

“படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகையர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்…” எனவும் மகிழ்வோடு இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்தார்.

Our Score