full screen background image

மாதுரிதீட்சித்-ஜூஹிசாவ்லா-வின் குலாப் கேங்..!

மாதுரிதீட்சித்-ஜூஹிசாவ்லா-வின் குலாப் கேங்..!

பாலிவுட் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படமான ‘குலாப் கேங்’ நாளை ரிலீஸாகிறது..!

நேற்றைய ஹீரோயின்களான மாதுரி தீட்சித்தும், ஜூஹி சாவ்லாவும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  அனுபவ் சின்ஹா, அபினாய் தியோ இருவரும் தயாரிக்க செளமிக் சென் இசையமைத்து,  இயக்கியிருக்கிறார்.

gulaab-gang-3

இந்தப் படத்தின் கதை கொஞ்சம் சர்ச்சையானதும்கூட.. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசப் பகுதிகளில் பந்தா மாவட்டத்தில் இருக்கும் பெண் தாதா குழுக்கள் பற்றிய கதை என்கிறார்கள். இந்தக் குழுவில் உள்ள பெண்கள் அனைவரும் பின்க் கலரில்தான் சேலை அணிந்திருப்பார்களாம்.. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், பேச்சுக்கள், அதிகாரத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்த்து குரல் கொடுத்து போர் தொடு்தத குழுக்களாம்.

gulab-gang-6

இந்தக் குழுவில் மிகப் புகழ் பெற்ற சம்பல்பாத் தேவி என்ற பெண் தலைவியின் கதைதான் இது என்ற பேச்சு அடிபட்டதால் அந்தப் பெண்மணி சென்ற வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்தப் படத்திற்கு தடை கேட்டு வழக்குத் தொடுத்தார். என்னுடைய கதையை, என்னுடைய அனுமதியில்லாமல் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக எனக்குச் சன்மானம் வழங்கப்பட வேண்டும். அதுவரையிலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று கோர்ட்டில் கேட்க.. உயர்நீதிமன்றமும் தடை விதித்திருந்தது.

GULAAB-GANG-1

ஆனால் இன்றைக்கு மேலும் தொடர்ந்த விசாரணைக்கு பின்னர் தடையை நீக்கி நாளை படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ஏதோ சமரசம் நடந்திருப்பதாக டெல்லி மீடியாக்கள் சொல்கின்றன.

மாதுரி தீட்சித் ஒரு படத்தில் இருந்தால் அவருக்கேற்ற நடனமும் கட்டாயமும் இருக்கும். படத்தில் அதிரடி ஆட்டக்காரி சரோஜ்கானும் உடன் இருக்கிறார். ஆக, டிரெயிலரில் பார்க்கும் நடனமே கண்ணைக் கட்டுகிறது.. போதாததுக்கு ஜூஹியும் இருக்கிறார்..  இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில் தபுவைத்தான் கேட்டார்களாம். அவர் மறுத்துவிட வாய்ப்பு ஜூஹிக்குக் கிடைத்துவிட்டது.

gulabgang-4

நேற்றைய கனவுக் கன்னிகளின் ரசிகர்களின் பேராதரவு இந்தப் படத்திற்குக் கிடைத்தால் தொடர்ந்து கனவிலேயே வந்து வந்து போய்க் கொண்டிருந்தவர்களை அடிக்கடி திரையிலும் காணலாம்..!

Our Score