full screen background image

“என் வருங்கால கணவர் யாருன்னு தெரிஞ்சா மக்கள் அதிர்ச்சியாயிருவாங்க” – நடிகை பாவனாவின் ஸ்டேட்மெண்ட்..!

“என் வருங்கால கணவர் யாருன்னு தெரிஞ்சா மக்கள் அதிர்ச்சியாயிருவாங்க” – நடிகை பாவனாவின் ஸ்டேட்மெண்ட்..!

நடிகைகளின் கல்யாணம் எதற்காக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என்றால், வரப் போகும் அந்த புதிய ‘தொழிலதிபர்’ யார் என்பதை அறிய ரசிகர்களுக்குள் இருக்கும் ஆசைதான்..!

கன்னட நடிகர், கன்னட தயாரிப்பாளர், மலையாள நடிகர் அனூப் என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த தனது கல்யாண மேட்டருக்கு தற்காலிகமாக ஒரு புள்ளிஸ்டாப்பை வைத்திருக்கிறார் நடிகை பாவனா.

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே “நான் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன்.. காதலில் திளைக்கிறேன்..” என்றெல்லாம் பேட்டி கொடுத்த பாவனா அந்த காதலர் யார் என்பதை மட்டும் இப்போதுவரையிலும் சொல்லவில்லை. அதனாலேயே கிளிக்கை இறக்கை முளைத்த கதையாக அனைவரும் ஆளாளுக்கு ஒருவரை கை காட்டி கிசுகிசு எழுதி வருகிறார்கள்.

இப்போது இந்த கிசுகிசுக்களுக்கு மேலும் உரமூட்டியிருக்கிறார் பாவனா.

நேற்று முன்தினம் ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “அனூப் மேனன் என்னோட பெஸ்ட் பிரெண்ட் அவ்ளோதான். அவர் என்னுடைய காதலர் அல்ல..

என்னோட கல்யாணம் நிச்சயமா அடுத்து வருஷம் நடந்திரும். அது காதல் கல்யாணம்தான்.. எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுண்டு. அதன்படி இந்தச் செய்தியை சொல்ல ஒரு நல்ல நேரம் பார்த்துக்கிட்டிருக்கேன்.

என் கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மாப்பிள்ளை யாருன்னு சொல்வேன். மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சு நிச்சயமா எனது ரசிகர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியாகப் போறாங்க..!” என்று சொல்லியிருக்கிறார்..!

நாம அதிர்ச்சியாகி மயக்கம் போடுற அளவுக்கு ‘அவரு’ எந்த நாட்டு மாப்பிள்ளையா இருக்கும்..?

Our Score