‘மாப்ள சிங்கம்’ திரைப்படம் மார்ச் 11-ல் ரிலீஸ்

‘மாப்ள சிங்கம்’ திரைப்படம் மார்ச் 11-ல் ரிலீஸ்

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘மான் கராத்தே’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனத்தின் தயாரிப்பீல் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘மாப்ள சிங்கம்’.

இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ படங்களுக்குப் பிறகு விமல், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனத்துடன் விமல் இணையும் மூன்றாவது படம் இது.

மேலும் சூரி, ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு : தருண் பாலாஜி, படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன், பாடல்கள் : யுகபாரதி, இசை : ரகுநந்தன், வசனம் : டான் அசோக், கலை : துரைராஜ், சண்டை பயிற்சி : திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர், ஸ்டில்ஸ் : ஆனந்த், தயாரிப்பு மேற்பார்வை : லோகு, இணை தயாரிப்பு : ஜேம்ஸ், தயாரிப்பு : எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், பி. மதன், இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ராஜசேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

‘மாப்ள சிங்கம்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் வெளியிடும் படங்களுக்கென்றே தமிழகத்தில் ஒரு தனி எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த ‘மாப்ள சிங்க’த்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் வரும் மார்ச் 11-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score