மோஹிதா சினி டாக்கீஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘மாணிக்.’ இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் ஆரம்ப விழா இன்று காலை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் மா.கா.பா. ஆனந்த் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக அறிமுக நடிகை சூசா குமார் ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் மனோபாலாவும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஒளிப்பதிவு – எம்.ஆர்.பழனிகுமார், இசை – தரண்குமார், பாடல்கள் – மிர்ச்சி விஜய், படத் தொகுப்பு – கே.எம்.ரியாஸ், கலை இயக்கம் – என்.வினோத் ராஜ்குமார், உடைகள் – செந்தில்குமார், சண்டை பயிற்சி – ராம்போ விமல், மக்கள் தொடர்பு – சுரேஷ் சுகு, தயாரிப்பு – எம்.சுப்ரமணியன், பி.வினோத், எழுத்து, இயக்கம் – மார்ட்டின்.
படம் பற்றி இயக்குநர் மார்ட்டின் பேசும்போது, “இந்தப் படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. சென்னையில் பேச்சுலராக வாழ்க்கையை நடத்தி வரும் ஹீரோ, ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மேற்கொள்ளும் பயணம்தான் படத்தின் கதை. காமெடியும், பேண்டசியும் கலந்து படம் உருவாகவுள்ளது..” என்றார்.









