full screen background image

பிரேம்ஜி இரு வேடங்களில் நடிக்கும் ‘மாங்கா’ செப்டம்பர் 11-ல் வெளியாகிறது..!

பிரேம்ஜி இரு வேடங்களில் நடிக்கும் ‘மாங்கா’ செப்டம்பர் 11-ல் வெளியாகிறது..!

ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரித்திருக்கும் படம் ’மாங்கா.’

இந்தப் படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  செல்வா.ஆர்.எஸ், இசை   –   பிரேம்ஜி அமரன், படத்தொகுப்பு   –   சுரேஷ் அர்ஸ், கலை    –  Dr.ஸ்ரீ, நடனம்    –  அஜெய்ராஜ், சண்டை பயிற்சி    –   மிரட்டல் செல்வா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஆர்.எஸ்.ராஜா, தயாரிப்பு   –  பி.சி.கே.சக்திவேல்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் சக்திவேல், “இந்தப் படத்தில் பிரேம்ஜி இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஒருவர் விஞ்ஞானி. இன்னொருவர் 1950-ம் வருடத்திய பாகவதர்.

இந்தப் படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி, தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அது தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இவனுடைய முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய ஒரு புதுமையான கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதரான இன்னொரு பிரேம்ஜியைச் சந்திக்கிறான்.

இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள் என்பதையும், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா என்பதையும் சுவையான நகைச்சுவை கலந்து சொல்கிறது இந்தப் படம். படம் இம்மாதம் 11-ம் தேதி திரைக்கு வருகிறது..” என்றார்.

Our Score