‘உனக்கென்ன வேணும் சொல்லு’ திரைப்படத்தின் டீசரும், முன்னோட்டமும் வெளிவந்த நாள்முதல் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்போதைய தமிழ்ச் சினிமாவின் டிரெண்ட்டான பேய் யுகத்தில் வெளிவரும் அடுத்த பேய் படம் இது என்பதைத் தவிர, sentiments-ம் இந்தப் படத்தில் நிறைந்துள்ளது.
கூடவே ஒரு அழகான, நேர்மையான காதலும் உண்டு என்பதை ஒரு பாடல் காட்சி மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
‘கார்த்திக்கும், ஜூடியும் தற்செயலாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். ஒரு பெண்ணின் காதலுக்காக ஏங்கும் கார்த்திக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜுடியை சந்திக்க வருகிறான்.
வந்த இடத்தில் 28 வயது ஆகும் ஜூடியின் வெளிப்படையான பேச்சும், அழகும், அவளது 8 வயது மகள் டெய்சியின் மேல் அவள் கொண்டுள்ள பாசமும் கண்டு மயங்குகிறான்.
அந்தத் தருணத்தில், ஜுடியிடம் அவன் மனம் கொண்டக் காதலை விவரிக்கும் இடம்தான் இந்தப் பாடல். மணமாகாத ஒரு ஆணுக்கும், மனமும் மணமும் உடைந்த ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் நிகழ்வுகளே இந்தப் பாடல்..
இந்தப் பாடலை தொடர்ந்து அவர்களிடம் ஏற்படும் விபரீதமான மாற்றங்கள்தான் ‘உனக்கென்ன வேணும் சொல்லு திரைப்படத்தின் திரைக்கதை..’ என்று விவரிக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.