ஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…!

ஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…!

‘வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘மாநாடு’ திரைப்படம் சில, பல தடங்கல்களுக்குப் பிறகு இன்றைக்கு பூஜையுடன் துவங்கியது.

இந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வந்ததில் இருந்தே தனி கவனத்தை ஈர்த்திருந்தது. சிம்புவுக்கு பொருத்தமான பல விவகாரங்கள் இந்தப் படத்தில் அடுத்தடுத்து நடந்து தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தன.

கடைசியாக இந்தப் படத்தில் சிம்பு நடிப்பது சென்ற மாதம்தான் உறுதியானது.  சிம்புவின் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். மற்றும் பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.

மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், தயாரிப்பு வடிவமைப்பாளர் – ராஜீவன், படத் தொகுப்பு – பிரவீன் கே.எல். சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – சேகர், ஆடை வடிவமைப்பாளர் – வாசுகி பாஸ்கர், டிசைனர் – டியூனி ஜான், மக்கள் தொடர்பு – ஜான், எழுத்து, இயக்கம் – வெங்கட் பிரபு.

இந்த ‘மாநாடு’ படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் துவங்கியது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் நாயகன் சிம்பு, நாயகி கல்யாணி பிரியதர்ஷன், நடிகரும், ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி, தயாரிப்பாளர் எஸ்.தாணு, பிரபல பைனான்ஸியர் அன்புச்செழியன் மற்றும் படத்தில் பங்கு பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Our Score