வி ஹவுஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’.
இந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சிம்பு ‘அப்துல் காலிக்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இன்னும் 2 நாட்கள் பேட்ச் வொர்க் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில், தற்போது அடுத்தக் கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பினால் விரைவில் முழு லாக் டவுன் வரும் வாய்ப்பிருப்பதால் சீக்கிரமாக படத்தை முடிக்க வேண்டி டப்பிங் பணிகளை இன்றே துவக்கிவிட்டார்கள்.
இந்த டப்பிங் பணிகளுக்கான பூஜையின்போது படக் குழுவினருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
தமிழில் உருவாகி உள்ள இந்த ‘மாநாடு’ படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.