full screen background image

கபிலன் வைரமுத்து எழுதிய ‘மாக்கியவெல்லி காப்பியம்’ நூலை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார்!

கபிலன் வைரமுத்து எழுதிய ‘மாக்கியவெல்லி காப்பியம்’ நூலை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார்!

குற்றப் பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு எழுத்தாளரும், பாடலாசிரியரும், கவிஞருமான கபிலன் வைரமுத்து எழுதிய ‘மாக்கியவெல்லி காப்பியம்’ என்ற நூலை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.

இது 2022-ம் ஆண்டில் வெளியான ‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகமாகும். பிரிட்டிஷ் இந்தியாவின் ‘குற்றப் பரம்பரை’ சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். 

முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த ‘மாக்கியவெல்லி’ இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட ‘எட்டு நாடுகள்’ என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1801-ம் ஆண்டு தொடங்கி 2057-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன் வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக இந்நூலின் பதிப்பாளரான டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார்.

“இஸ்ரேல் அரசு இணைய வெளியில் மேற்கொண்ட முக்கியமான முன்னெடுப்புதான் இந்த இரண்டாம் பாகத்திற்கான முதல் பொறி” என்று நூலாசிரியர் கபிலன் வைரமுத்து தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நாவலுக்கென்று பிரத்யேகமாக மூல் என்ற கணினி மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘மாக்கியவெல்லி’ காப்பியம் நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் வருகிற அக்டோபர் 06-ம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் ஆசிரியர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

‘மாக்கியவெல்லி’ காப்பியம் கபிலன் வைரமுத்துவின் பன்னிரண்டாவது நூல். ஐந்தாவது நாவல். ‘ஆகோள்’ முதல் பாகம் ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாக்கியவெல்லி காப்பியம் – வெளியீட்டு காணொளி :

https://we.tl/t-L2m4j4rUAl

Our Score