கணவன்-மனைவி உறவுகள் பற்றிப் பேச வரும் ‘அதையும் தாண்டி புனிதமானது’!

கணவன்-மனைவி உறவுகள் பற்றிப் பேச வரும் ‘அதையும் தாண்டி புனிதமானது’!

வேல்ஸ் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பழனிவேல் தயாரிக்கும் திரைப்படம் ‘அதையும் தாண்டி புனிதமானது.’

Dr.K. கருணாகரன், பாண்டிச்சேரி K.பிரகாஷ், வெள்ளோடு நாக முருகேசன், கோடி வெங்கட்லெஷ்மி, கோபாலகிருஷ்ணன், A. ராமசாமி,  Dr.A. அப்துல் கபூர், P.கணேஷ், A. ஆரோக்கியராஜ், ராசினாம்பட்டி A.C.ராஜுத் தேவர் ஆகியோரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

புதுமுகங்கள் ஜெகின், பிரபு சாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா, குஷி, வீன் ஷெட்டி, சஞ்சனா, வெங்கடசுப்பு, நாக முருகேசன் போன்ற நடிகர்களுடன்  ‘கராத்தே’ ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த காமெடி தர்பாரில் ‘கஞ்சா’ கருப்பு, முத்துக்காளை, ‘சிசர்’ மனோகர், ‘கிரேன்’ மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, ‘சாரைப்பாம்பு’ சுப்புராஜ் மற்றும் ‘கம்பம்’ மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன், படத் தொகுப்பு – ஆர்.கே, பாடல்கள் – வைரபாரதி, வெங்கடசுப்பு, நாக முருகேசன், மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா, தயாரிப்பு நிர்வாகம் – மதுரை சி.ஆர்.முத்துப்பாண்டி. இயக்கம் –ஆர்.வெங்கட்ரமணன்.

இயக்குநர் ஆர்.வெங்கட்ரமணன் ஏற்கெனவே ‘அப்பா வேணாம்ப்பா’ என்ற சமூக நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.

இத்திரைப்படம் கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டது.

நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப் போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற வித்தியாசமான கதைக் களத்தை துணிந்து தொட்டிருக்கிறார் இயக்குநர்.

குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.

படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Our Score