‘#Love’ – Web Series – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது!
இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன.
நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.
ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே தற்போது டிஜிட்டல் உலகில் இருந்து வருகிறது.
இப்படியான நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’.
ஷோ-ரன்னர், சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில், இருவருக்கும் இடையிலான உறவு கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி கதை நகர்கிறது.
மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர்.
இதற்கிடையே உருவாகும் போட்டி, காதல் மற்றும் உறவுகள்தான் தொடரின் கதைக் களமாக அமைந்துள்ளது.
ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில்:
“இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை இயல்பாகச் சொல்வதோடு, அதன் உணர்வுகளையும் அன்பையும் விட்டுவிடாமல் கதை சொல்லியிருப்பதுதான் ‘#Love’ தொடரின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
பாலாஜி உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள் லட்சியங்களைக் கொண்டவர்களாகவும், குறைகளுடன் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
அதனால் அவர்களுடன் பார்வையாளர்கள் எளிதாகத் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.
அர்ஜுனும் ஐஸ்வர்யாவும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய உயிரோட்டத்தை வழங்கியுள்ளனர்.
இன்றைய தலைமுறையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு கதையை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்களது எண்ணத்துக்கு இந்தத் தொடர் சரியாகப் பொருந்துகிறது.” என்றார்.
இயக்குநர் பாலாஜி மோகன் கூறுகையில்:
“இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் ‘#Love’ உருவானதற்கான முக்கிய காரணம். காதல் மாறியிருக்கிறது,
ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்விதமும் மாறியிருக்கிறது. ஆனால், உறவுகளுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் மட்டும் எப்போதும் மாறுவதில்லை.
இந்தத் தொடரில் இரண்டு பேர் காதலில் விழுவதை மட்டுமே சொல்லவில்லை. அவர்களது நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் தங்களைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ளும் பயணம் ஆகியவையும் முக்கியமான பகுதிகளாக இடம் பெறுகின்றன.” என்றார்.
‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.
காதலில் முக்கியமானது கெமிஸ்ட்ரியா… அல்லது கம்ஃபோர்ட்டா? அதற்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ‘#Love’ தொடரில் பார்க்கலாம்.
‘#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்!
*Chemistry or Compatibility? ‘#Love’ Bets It All, Only on Netflix October 2*
*Showrun and produced by Soundarya Rajinikanth, and directed by Balaji Mohan, #Love stars Arjun Das and Aishwarya Lekshmi in a refreshing new pairing premiering on October 2.*
17 September 2026: Chemistry or compatibility – which one actually wins? That’s the question two rival dating-app founders are about to put everything on the line for, in Netflix’s upcoming Tamil series #Love, premiering on October 2. Showrun and produced by Soundarya Rajinikanth, and directed by acclaimed filmmaker Balaji Mohan, this series stars Aishwarya Lekshmi and Arjun Das in a fresh on-screen pairing – and spoiler alert, their chemistry needs no algorithm to figure out!
And honestly, it hits close to home – “love” today comes with swipes, matches, unread messages, and occasionally, a full-blown rivalry – seri dhaane (translation: isn’t that right)? Set against the vibrant world of rival dating apps FOUND and Find My Bae, #Love follows founders Tara and Matthew, who’ve built entire businesses matching everyone else… Except for themselves.
Monika Shergill, Vice President, Content, Netflix India, said, “This has been a defining year for Netflix India, as we’ve deepened our investment in storytelling from the South of India — and #LOVE is a title we’re especially excited about. As we expand our slate across Tamil storytelling, this contemporary, feel-good rom-com stood out as a genre and that was ready for a fresh, confident take. #LOVE steps into that space with a modern, chemistry-driven love story about two rival dating-app founders who end up testing their own theories of love on each other. Director Balaji Mohan, together with showrunner and producer Soundarya Rajinikanth, brings a wonderfully playful perspective to the series, while Arjun Das and Aishwarya Lekshmi bring the central relationship to life with chemistry, warmth and humour. The series captures that giddy, unguarded feeling of falling for someone you never saw coming – funny, warm, and exhilarating to anyone who’s ever overthought a text message.”
Speaking about the series, showrunner and producer Soundarya Rajinikanth said, “What drew me to #Love was how effortlessly it captures relationships today without losing its warmth and emotion. Balaji has created characters who are ambitious, flawed and incredibly easy to root for, and Arjun and Aishwarya bring such a refreshing energy to them. It’s exactly the kind of contemporary story we were excited to bring to audiences with Netflix.”
Echoing this, director Balaji Mohan added, “When we made #Love, we wanted to tell a story that feels like it belongs to today. Romance has evolved, the way we meet people has changed, but the emotions at the heart of relationships remain incredibly familiar and timeless. What I love about this series is that it isn’t only about two people falling for each other – friendship, family, ambition and finding yourself are equally important parts of their journeys.”
#Love is written by Nirmal Williams, with Sharada Subramanian and Shweta Chakravarty as co-writers, and produced by May6 Entertainment Factory. Chemistry or compatibility – which will you bet on? Get ready for a whole new kind of modern romance!
~ #Love premieres October 2, only on Netflix! ~









