full screen background image

ராம் பொத்தினேனி-கீர்த்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் துவங்கியது

ராம் பொத்தினேனி-கீர்த்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் துவங்கியது

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தை லிங்குசாமி இயக்குவதற்கு முன்பாக தன்னிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பல்வேறு சினிமா அமைப்புகளிடத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார்கள் குறித்த விசாரணை சென்னை, ஹைதராபாத் இரண்டு இடங்களிலும் நடந்து முடிந்து இருவருக்குமிடையில் சமரசம் செய்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. லிங்குசாமியின் சகோதரரும், தயாரிப்பாளருமான, சுபாஷ் சந்திர போஸ் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆதி பின்னிஷெட்டி, நதியா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP,  சண்டை இயக்கம் – அன்பறிவ், படத் தொகுப்பு – நவீன் நூலி, வசனம் – Sai Mathav Burra, Brinda Sarathy, இயக்கம் – லிங்குசாமி.

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

 
Our Score