லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி-அஞ்சலி நடிப்பில் இன்னமும் பெயர் வைக்கப்படாத படத்தின் துவக்க விழா, இன்று காலை சாலிகிராமம் மோகன் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், முன்னாள் பிலிம் சேம்பர் தலைவர் சி.கல்யாண் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்யாண் கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.
ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி தமிழில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுராஜ் இயக்கம் செய்கிறார்.
Our Score