full screen background image

“ஒன்றரை கோடி கடனில் இருக்கிறேன்…” – விஜய் சேதுபதியின் ஓப்பன் டாக்..!

“ஒன்றரை கோடி கடனில் இருக்கிறேன்…” – விஜய் சேதுபதியின் ஓப்பன் டாக்..!

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ‘பீட்சா’ மற்றும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘சூது கவ்வும்’ ஆகிய படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு திடீர் உச்ச நட்சத்திரங்களில் ஒன்றாக ஆனவர் விஜய் சேதுபதி..

இதற்குப் பின் இவர் நடித்த  ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐயாவை பிடிக்க முடியாது. கை நிறைய படங்களை வைத்திருக்கிறார்.

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘வன்மம்’, ‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’, ‘வசந்த குமாரன்’ என ஐந்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் ‘ஆரஞ்சு மிட்டாய்’  இவரது சொந்தப் படம். இந்தப் படத்திற்கு வசனத்தையும் விஜய் சேதுபதியே எழுதுகிறாராம். படத்தில் மிக வித்தியாசமாக 55 வயது  மனிதராக நடிக்கிறாராம். படத்தை பிஜு விஸ்வநாத் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

vijay sethupathy

”ஆரஞ்சு மிட்டாய்’னு சொன்னா புளிப்பும் இனிப்பும் கலந்த ஒரு டேஸ்ட் மனசுக்குள்ள பரவுதுல்ல… அதுதான் படம்..! நான், ‘சூது கவ்வும்’ ரமேஷ், ‘பண்ணையாரும் பத்மினி’யும் கிளீனர் ஆறுமுகம்… மூணு பேரும் நடிக்கிறோம். என் கேரக்டர் 55 வயசான ஒரு நோயாளி. இனிப்பு, கசப்புனு வாழ்க்கையின் எந்தச் சூழலையும் ஒரே மாதிரி ரசிச்சு வாழ்ற ஒரு மனிதனின் கதை. . .” என்கிறார் விஜய் சேதுபதி

சினிமா, நடிப்பு.. இது ரெண்டையும் நான் சுவாசிக்கிறேன். மத்தவங்க படங்களையும் கை தட்டி ரசிப்பேன். ஏன்னா நான் முதல்ல ஒரு ரசிகன்… அப்புறம்தான் நடிகன். இன்னிக்கு இருக்குற நிலைமைல இண்டஸ்ட்ரீல நான் யாருடனும் போட்டி போட விரும்பலை. யாராவது என்னை போட்டிக்குன்னு கூப்பிட்டால்கூட போக மாட்டேன்.  அப்படியே போட்டில என்னைச் சேர்த்தால் இரண்டு கையையும் தூக்கிட்டு, நான் தோத்துப் போயிட்டேன்னு ஆரம்பத்துலேயே ஒதுங்கிருவேன்…” என்கிறார் விஜய் சேதுபதி.

ஒரு வருடத்திற்கு முன்பு இவர் தயாரித்த ‘சங்குதேவன்’ படம் பற்றி சங்கடத்துடன் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.

”நான் ரொம்ப ஆசைப்பட்டு நடிக்க ஆரம்பிச்ச படம் ‘சங்குதேவன்’. அதை நான் கமிட் பண்ணியிருக்கக் கூடாது. அதுனால மூணு மாசமா வீட்ல சும்மா உட்காந்திருந்தேன். இப்போ ஒன்றரைக் கோடி ரூபாய் கடனாகி அதைக் கட்டிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு…” என்று சிரித்தபடியே சொல்கிறார் விஜய் சேதுபதி.

பரவாயில்லண்ணே.. விட்டதை இங்கேயே தேடிப் பிடிச்சிரலாம்.. திரும்பிப் பார்க்காம போய்க்கிட்டேயிருங்க..!

Our Score