full screen background image

லட்சுமி மேனன் ஏன் வரலை..?

லட்சுமி மேனன் ஏன் வரலை..?

ஒரு சினிமா சம்பந்தமான விழா என்றால் புகைப்படக் கலைஞர்கள் ஹீரோயினைத்தான் மும்முரமாக தேடுவார்கள். கொஞ்சமாவது வித்தியாசம் வேண்டித்தான்..!

நேற்றைய ஜிகர்தண்டா படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் அனைவருமே ஆண்களாக காட்சியளித்து புகைப்படக் கலைஞர்களை நோகடித்துவிட்டார்கள். படத்தின் ஹீரோயின் லட்சுமி மேனன் வராததன் காரணம் என்னவோ என்று பலரும் கேட்டார்கள்..

இப்போது சிப்பாய், நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா என்று 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமி மேனன்.. நடிப்பின் ஊடேயே தனது பதினோறாம் வகுப்பு படி்பபையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

எர்ணாகுளத்தில் உள்ள பவன்ஸ் முன்ஷி வித்யாஷ்ரமம் என்ற பள்ளியில் வணிகவியல் படித்து வரும் லட்சுமி மேனனுக்கு நேற்றைக்குத்தா்ன் ஆண்டு இறுதித் தேர்வுகள் துவங்கியதாம். நேற்றைக்கு ஆங்கிலமாம். இன்னும் 5 பாடங்கள் இருக்கின்றன. ஒருநாள் விட்டு ஒரு நாள்தான் தேர்வு என்றாலும் நிறைய படிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நடிப்போடு, படிப்பையும் விடக்கூடாது என்ற கொள்கையுடன் இருக்கும் லட்சுமிமேனனைவிடவும், இதற்கு அனுமதித்துள்ள இவருடைய பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்..!

அட்லீஸ்ட் ப்ளஸ் டூவையாவது முடிச்சிட்டீங்கன்னா, உங்க எதிர்காலம் ரொம்ப பிரகாசமா இருக்கும் மேடம்..!

Our Score